தமிழ்த் தேசியக் கட்சிகளை இன்று சந்திக்கின்றார் இந்தியத் தூதுவர்
தமிழ்க் கட்சிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ்க் கட்சிகளை அழைத்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகளுடனான இந்தியத் தூதுவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது