கண்டியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கலஹா வெதஹெட்ட கிராமத்தைச் சேந்த 24 வயதான உடுதெனியேகெதர கவிந்துரொசான் பிரேமவன்ச என்ற இளைஞன் உயிரிந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட இளைஞர்கள் குழு திருகோணமலைக்கு சுற்றுலா செல்லும் நோக்கில் வான் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, குழுவினருடன் இனைந்துகொள்தற்காக நேற்று (13) அதிகாலை கலஹா நகரிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வெதஹெட்ட பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் நகரை நோக்கி பயணித்த வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் முச்சக்கரவண்டியை அவரின் சகோதரர் ஓட்டிச்சென்ற நிலையில், நித்திரை கலக்கம் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கலஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்துடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் பேராதனை வைத்தியாசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.