16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அயல்வீட்டு அங்கிள் கைது

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அயல் வீட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அநுராதபுரம் எலயாபத்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அயல்வீட்டு அங்கிள் கைது | Girl Sexually Abused Neighbor Uncle Arrested

 சிறுமியை மிரட்டி  துஷ்பிரயோகம்

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி தனது தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் தேசிய அடையாள அட்டை ஒன்றைத் தயாரிப்பதற்காகப் புகைப்படம் எடுப்பதற்குச் சந்தேக நபரான அயல் வீட்டவருடன் இணைந்து அநுராதபுரம் நகரத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரான அயல் வீட்டவர் சிறுமியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர், குறித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி சிறுமியை மிரட்டி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான அயல் வீட்டாளர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *