காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோர விபத்தில் மகள் பலி – தந்தை படுகாயம் | Accident In Sri Lanka Daughter Death After Injury
எனினும் சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.