ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு என்பவரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
குறித்த தீர்மானம் நேற்றையதினம் (18-08-2024) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மொட்டுக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
எஞ்சியவர்கள் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்பத்தினரான கருணா கொடித்துவக்கு சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளனர்.நரியரோடு வாழ முடியாது இதுவே பெரும்பான்மை மக்களின் கருத்து