வழக்கமாக காலையில் செய்யும் சில செயற்பாடுகளில் ஒரு சில நல்ல பழக்கங்களை சேர்த்து கொள்வதால் உடலிலுள்ள உறுப்புக்களை சுத்தமாகவும் நச்சுத்தன்மையற்றதாகவும் வைத்து கொள்ளலாம்.
எமது உடலில் உள்ள உறுப்புக்களில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் முக்கிய உறுப்புகளாக பார்க்கப்படுகின்றது.
இந்த உறுப்புக்களில் நச்சுக்களை வடிகட்டி மற்றும் உடலில் இருந்து அவற்றை அகற்றுவது சிரமமாக இருக்கும்.
இதனை இலகுவாக அகற்ற வேண்டும் என்றால் நாம் காலையில் செய்யும் சில பழக்கங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வகையில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புக்களை எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தும் பழக்கங்கள்
1. காலையில் எழுந்து உங்களின் வழக்கமான வேலைகளை முடித்து விட்டு யோகா போன்ற பயிற்சிகள் செய்யலாம். அதிலும் குறிப்பாக சுவாச பயிற்சிகள், முன்னோக்கி வளையும் மற்றும் ட்விஸ்ட் போன்றவற்றை செய்யலாம். இதனால் உடலிலுள்ள ரத்த ஓட்டத்தை தூண்டப்பட்டு செரிமானம் மற்றும் நச்சுகளை அகற்றும்.
2. தினசரி யோகா பயிற்சி செய்வதன் மூலம், மன அழுத்தம் குறைக்கிறது. அத்துடன் ரத்தயோட்டம் சீராக இயங்குகின்றது. இதன் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
3. காலை நேர உணவில் அதிக கவனம் செலுத்து வேண்டும். இவை உடலிலுள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் லெமன் கலந்து குடிக்கலாம். இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.