இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாடாளுமன்ற ஆசனங்களை (159) எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து அவர் நேற்று இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது, ”நாங்கள் பெற்ற வெற்றியின் கனத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

குடும்ப அரசியல்

அதை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் பலமான அரசியல் கட்சிகளை தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றோம்.

தேர்தலில் நடந்த எதிர்பாராத விடயம்: அநுர தரப்பு வெளிப்படை | Unexpected Thing In Parliamentary Elections Tilvin

பழைய அரசியல் முடிந்துவிட்டது. மக்கள் அந்த சகாப்தத்தை முடித்துவிட்டார்கள். பல்வேறு சலுகைகளுடன் குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் இப்போது முடிந்துவிட்டது.

சாதாரண மக்கள் நமது பயன்பாட்டைப் புரிந்து கொண்டதால் கிடைத்த வெற்றி இது, சவால்களை வெல்வதற்காகவே தவிர, இந்த பலத்தை பயன்படுத்தமாட்டோம்” என்றார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *