அவர்களிற்குப்பின்னால் அரசகைக்கூலிகள் அதனால் உங்களின் உயிருக்கும் ஆபத்து வரலாம்?
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு தரகர் ஒருவரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து வந்த புலம்பெயர் நபரொருவரின் 85 இலட்சம் ரூபா பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனடாவிலிருந்து வருகை தந்த புலம்பெயர் நபரொருவர் தெல்லிப்பழையில் தங்கியுள்ளார்.
இதனையடுத்து, காணி ஒன்றினை கொள்ளளவு செய்வதற்காக தரகர் ஒருவருடன் தொடர்பினை பேணியுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த தரகர், கனடாவிலிருந்து வந்த புலம்பெயர் நபரின் 85 இலட்சம் ரூபாவினை திருடிச் சென்றுள்ளார்.
குறித்த புலம்பெயர் நபர் 4 நாட்களின் பின்னர் தனது பணத்தினை பார்த்துவிட்டு பணத்தினை காணாத நிலையில் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.