யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் தும்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான பிரேமலா கேசவதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது, வீதியால் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதி விபத்துக்குள்ளானது.

யாழில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! | Family Woman Dies Injured In An Accident In Jaffna

விபத்தில் காயமடைந்தவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மீண்டும் போதனா வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (09-09-2024) உயிரிழந்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *