புதிய இணைப்பு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,894 வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 2 ஆசனங்களை பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 32,232 வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 29,711வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 21,102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி(SLPP) 17710 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர்.
2020 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 69,916 வாக்குளையும் 03 ஆசனங்களையும் வன்னி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 42,524 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வன்னி மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் வன்னி மாவட்டத்தில் 37,883 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வன்னி மாவட்டத்தில் 11,310 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
மன்னார் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15,007 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 8,684 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 7, 948 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 7,490 வாக்குகளைப் பெற்றுள்ளது.
வவுனியா
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 19,786வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 10,736வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயகக் கட்சி (DNA) 6556 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 5886 வாக்குகளைப் பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 4371 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2349 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 1825 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 1399 வாக்குகளைப் பெற்றுள்ளது.