புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்றையதினம் (22-08-2024) பிற்பகல் ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் வடத்த கோட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.