இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாரிஸின் (Paris) புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பெண் படுகொலை
மேலும், 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்த கொலை நடந்து சில நாட்கள் ஆகிய நிலையில் தற்போது இந்த விடயம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.