நல்லூரடியில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ; பொலிஸார் மீது கஜேந்திரன் குற்றச்சாட்டு
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.திலீபனின் தியாகத்தால் தான் இந்தியாவிற்கு எதிராக விதலைப்புலிகள் மூன்று வருடம் இந்தியாப் படைகளோடு போராடி அவர்களை மன்னில் இருந்து கலைத்தார்கள் இல்லையெனில் அது இந்தியாவின் ஒரு மாநிலமாகவே ஒட்டுமொத்த இலங்கையும் இருந்து இருக்கும் இது சிங்களக்காடையர்களிற்குத் தெரயுமா?
கனிசமான சிங்களவர்கள் இந்த உண்மையை அறியாமல் இருப்பது இலங்கை மக்களின் ஒரு சாவக்கேடான விடயம் என இந்தியாவின் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி தெரிவித்தள்ளார் .
கிழக்கை முழுமையாகச் சிக்களவரிகளிற்குத்தருவதாக ஆசை காட்டி திருகோணமலையை மட்டும் வடக்கோடு இனைத்து வடமாகணத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக வைத்து இருப்பதே ராஜீவின் திட்டமாகயிருந்தாலும் காலப்போக்கில் இலங்கை முழுவதையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாத்துவதே அவர்களின் திட்டமாகயிருந்தது .
இதற்குசீனாபோன்றநாடுகள் இங்கே காலூன்றினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லையென்பதே ராஜீவின் நிலைப்பாடாகயிருந்தது முதல் அமைச்சர் ஆவதற்கு பிரபாகரன் சம்மதிக்காமல் தான் முதலில் இந்தியாவின் நோக்கத்தை அறிய திலீபனை உண்ணாவிரதத்திற்கு நிறுத்தினார் ,
அவரின் சாவிற்குப்பின்னரே விடுதலைப் புலிகள் இந்தியாப் படைமீது போர் கொடுத்தார்கள் ஆனால் இதற்கு ஜெயார் வேர்த்தனாவின் ஆரவும் அவர்களிற்குக்கிடைத்தது. பிரபாகரனின் ஆதரவு கிடைத்து இருந்தால் அது சிங்களவரிகளின் நாடாகயிருந்திருகாது அது இந்தியாவின் மாநிலமாகயிருந்து இருக்கும் உன்மையிலே திலீபனை சிங்களவர்களும் தேர்ந்து வணங்க வேண்டும் திலீபனால் தமிழர்களிற்குற்குக்கிடைத்த பலனை விட சிங்களவர்களிற்கே கிடைத்துள்ளது
திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாத நிலையில், 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்துக் கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக திலீபனின் உருவச்சிலையை அகற்றிச் சென்றதாக செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலையை உடைத்துச் சென்றமையை வன்மையாக கண்டிக்கின்றேன். இது அநுர அரசாங்கத்தின் இனவெறியின் மற்றுமொரு முகத்தை வெளிப்படுத்துகின்றது.அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக தன்னுடைய முகவர்களைப் பயன்படுத்தி தேர்தல் காலப்பகுதியில் நினைவேந்தல்களை அனுமதிப்போம், சிலைகளை நிறுவுவோம் என்று மேடை மேடையாகச் சொல்லியிருந்தார்கள்.
அநுர அரசு சார்பில் போட்டியிட்டவர்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பம் உறுதிப்படுத்தப்படும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகியுள்ள விளக்கம் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை.

அனுராவிற்கு வோட் போட்ட மக்கள் கவலை அடைந்ததாக எமது செய்தி யாழர் தெரி வித்துள்ளார்.
