தமிழர் பகுதியில் 12 வயது மீது பாலியல் துஷ்பிரயோகம் ; 17 வயது சிறுவன் கைது, பேசாலை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தொடர்பான பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று மன்னார் சந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழர் பகுதியில் 12 வயது மீது பாலியல் துஷ்பிரயோகம் ; 17 வயது சிறுவன் கைது | Sexual Abuse Of A Child Over 12 In A Tamil Area

கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து சுமார் 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments