அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதன்படி, கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்சியின் ஆதரவாளர்கள் இன்றிரவு (14-08-2024) 8.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகார பீடம் ஆகியன இன்று (14) மாலை கொழும்பில் கூடி ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்றிரவு (14) 8 மணியளவில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
.