செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (14) பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
செஞ்சோலை மாணவர் படுகொலை: உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு
விமானப்படைமுல்லைத்தீவு (Mullaitivu) – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்பட 61 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சுடரேற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |