காதலனுடன் மனைவி தலைமறைவு ; கணவன் மரத்திலேறி ஆர்ப்பாட்டம்; வவுனியாவில் சம்பவம்!
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (03) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனைவி இன்னொருவருடன் தகாத உறவு
தனது மனைவி இன்னொருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக் கொண்டு தன்னை விட்டு சென்றதாக கூறி குறித்த நபர் மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
தனது மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பொலிஸார் அவரை மரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
அதேவேளை , குறித்த நபர் மரத்தில் ஏறியதும் அந்த இடத்தில் ஏராளமன பொதுமக்கள் குவிந்ததாகவும் கூறப்படுகின்றது.