தவறான உறவே காரணமாகயிருக்கலாம் என முதியவர்கள் தெரிவிப்பு

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் நேற்றிரவு (05-09-2024) அவரது வீட்டில் இருந்த நிலையில் இன்று (06-09-2024) அதிகாலை அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபரியும் பெண் எடுத்த விபரீத முடிவு! | Vavuniya General Hospital Working Woman Suicide

குறித்த சம்பவத்தில் 39 வயதான லோயினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்பாகவே நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *