வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் (Ariyanethran) தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்து கண்காணித்துள்ளனர்.

குறித்த பிரச்சார கூட்டமானது, வவுனியா – குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று (08) இடம்பெற்றுள்ளது.

அதன் போது, தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய செயல்பாடுகள் தொடர்பிலும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

குறிப்புகள்

அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran

மேலும், அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டதுடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அரசியல்வாதிகளாலும், ஜனாதிபதி வேட்பாளராலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர்கள் குறிப்புக்களை எடுத்துக் கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran
தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran
தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு | Eu Team Monitored Campaign Rally Ariyanethran
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *