யாழில் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரால் பரபரப்பு ; கொலை செய்யப்பட்டாரா!யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இன்றையதினம் (9) குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய கஜேந்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள்
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதுடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்படுகின்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.!
இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிசார் தடயங்களை சேகரித்தனர்.
மீட்கப்பட்டவரின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.