முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்று வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் விடுதலைப்புலிகளின் புதையலை தேடி அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

மீண்டும் விடுதலைப்புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி | Excavation In Search Of Ltte Treasure Again

பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மீண்டும் விடுதலைப்புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி | Excavation In Search Of Ltte Treasure Again

இந்நிலையில் தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி தர்மலிங்கம் உத்தரவிட்டதனை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.   

மீண்டும் விடுதலைப்புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி | Excavation In Search Of Ltte Treasure Again
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *