ரஷ்ய (Russia) போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை (Sri lanka) இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உக்ரைன் (Ukraine) அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர்கள் ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேவையான நடவடிக்கை
இது தொடர்பில், சம்பந்தப்பட்ட இலங்கையர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது