நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு – கிழக்கை சார்ந்த தமிழர் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் இவ்வாறானதொரு பங்களிப்பு குறித்து ஒரு சிறந்த திட்டமிடலுடன் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக நிற்கின்றது.
அதேவேளை, தமிழர் பகுதிகளில் முதலீடுகளையோ அல்லது வேலைவாய்ப்புக்களையோ மையப்படுத்திய ஒரு கட்டமைப்பு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இது வரை காலமும் இல்லாமைக்கான காரணம் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
அந்தவகையில், ஈழத்தேசத்தின் சாதனையாளரான தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் இவ்வாறானதொரு சூழல் குறித்த நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டவற்றுடன் வருகின்றது, லங்காசிறியின் ஆயிரமாவது ஊடறுப்பு நிகழ்ச்சி,