மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்றைதினம் (13.09.2024) மன்னார் (Mannar) நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

பொதுக்கூட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் (Selvam Adaikalanathan) ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ( Siddharthan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் (Suresh Premachandran) ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ( Sivasakthy Ananthan), தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன் மற்றும பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுக்கூட்டத்தின் போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Gallery

GalleryGallery

GalleryGallery

GalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *