இந்தியாவில் அந்திர மாநிலத்தில் அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அந்திர மாநிலம் சித்தூரில், இன்றையதினம் (13-09-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் திருப்பதியில் இருந்து பெங்களூரு சென்ற அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 33க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.