தேர்தலில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் விலகவேண்டும் : தர்மலிங்கம் சுரேஸ் அறைகூவல்தமிழ் தேசிய போராட்டம் சர்வதேசத்தில் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளர் இறக்கப்பட்டுள்ள நிலையில் இது இனத்துக்கு செய்கின்ற பச்சை துரோகம் எனவே இந்த பழியை சுமக்காமல் அரியநேத்திரன் தேர்தலில் இருந்து விலகவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் படுவான்கரை மண்ணில் இருந்து அறைகூவல் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் தமிழ் தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க கோரிய துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரசார நடவடிக்கை நேற்று (14) தேசிய அமைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்வதற்காக 8 ஜனாதிபதிகளை சந்தித்துள்ளோம் ஆனால் அனைவரும் பொய்யான வாக்குறிகளை வழங்கி எங்களுடைய மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களையும் இருப்புக்களை கேளிவிக் குறியாக்கிய விதமாகவே செயற்பட்டு வந்தனர்.
அதனடிப்படையில் வடக்கு கிழக்கு மக்கள்; ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சி கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இருந்து இந்த தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.
இந்த நாட்டினுடைய அடிப்படை பிரச்சினை ஒற்றையாட்சி கட்டமைப்பு.இது பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் முன்னிறுத்தி ஏனைய இனங்களை அடக்கி ஓடுக்கும் விதமாகத்தான் இந்த அரசியல் அமைப்பு இருக்கின்றது.
ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு
எனவே இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பை சமஸ்டி கட்டமைப்பாக மாற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில் தமிழர்கள் கடந்த 75 வருடங்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தமிழ் என்ற உணர்வை காட்டி தமிழர்களை மடையர்களாக்கும் செயலை செய்ய போகின்றனர் எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
பிள்ளையான், கருணாவாக இருக்கலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவராக இருக்கலாம் அனைவரும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை பாதுகாக்க துடிக்கின்றனர்.
எனவே அரியேத்திரன் எதற்காக பொது வேட்பாளராக களமிறங்கி சோரம் போனார் என தெரியவில்லை எனவே அவர் இதில் இருந்து விலகவேண்டும் இது இனத்துக்கு செய்யும் கைங்கரியமாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம் சிறுபாண்மை தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் போனால் சஜித்தை தோற்கடிப்பதின் மூலம்தான் ஜனாதிபதியாக வரலாம் என கனவுகாணும் ரணிலின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பவர்களே இந்தக் கைக்கூலிகள் எல்லாம் தமிழன் தான் என நினைத்து இருந்தால் கருணாவைபிரித்து விடுதலை போராட்டத்தை முற்றாக அழிக்க அவர்களால் முடிந்துயிருக்காது, அது போல் ரணில் என்ற நரியை வெளியேற்ற சஜித் அவர்களே தமிழர்களிற்கு சிறந்த ஆயுதம் ஆகவே முதலாவது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கும் விருப்புவாக்கை சஜித்திற்கும் போட்டு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்யைப் பெற்றுக்கொள்வோம்?