யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசியையான கலைவாணி என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் மற்றுமொரு துயரம்; திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு | Teacher Dies After Suddenly Fainting Jaffna

கலங்கும் பாடசாலை சமூகம்

பாடசாலைக்கு எப்போதும் முதல் ஆளாக வந்துவிடும் அவர், பிள்ளைகளை வழி நடத்தி வருவதுடன், பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் என்றும் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர் எனவும் பாடசாலை சமூகம் அவரை நினைவு கூர்ந்துள்ளது.

இந்நிலையில் ஆசிரியைக்கு மூளையில் ஒரு கட்டி இருந்ததாக கூறப்படும் நிலையில் , அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை  யாழ்ப்பாணத்தில் அண்மைகாலங்கள்  இளவயது மரணங்கள் அதிகரித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *