அனைத்து இலங்கையர்களும் ஒரு குடையின் கீழ் நின்று முதலில் ரணிலை விழுத்துவோம்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதனை பிரசார நடவடிக்கைகளின் போது கிடைத்த ஆதரவினூடாக தெளிவாக புலப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் முத்துக்குமாரசுவாமி லக்சயன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சஜித்துக்கான ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சஜித் பிரேமதாச எதிர்க் கட்சி தலைவராக இருந்துக் கொண்டு 8 தடைவைகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
அத்துடன், இவர் எதிர்க் கட்சித்தலைவராக இருந்து சுமார் 250 கோடி ரூபா வேலை திட்டங்களை நாடு முழுவதும் அவர் மேற்கொண்டுள்ளார்.
https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F534901789060834%2F&show_text=true&width=476&t=0
அதாவது, இவர் தேர்தலை நோக்கி செல்லாமல் கடந்த நான்கு வருடமாக இந்த வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார்.