மட்டக்களப்பில் பரபரப்பு…தீக்கிரையான கல்லடி பேச்சியம்மன் ஆலயம்! அச்சத்தில் மக்கள்மட்டக்களப்பில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்லடி பேச்சி பேச்சியம்மன் ஆலயம் முற்றாக தீக்கிரையாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் ( 20-09-2024 ) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்லடி உப்போடையில் அமைந்துள்ள பேச்சியம்மன் ஆலையத்தில் இன்று பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சியம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.

அமயத்தில் தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பில் பரபரப்பு...தீக்கிரையான கல்லடி பேச்சியம்மன் ஆலயம்! அச்சத்தில் மக்கள் | Batticaloa Kadaladi Pachaiamman Temple Fire

குறித்த பேச்சியம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக குறித்த பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில் அம்மாளின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டுள்ளமையே சிறப்பம்சமாகும்.

இன்று ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தை மிகப்பெரிய பேரளிவுக்கான ஆரம்பமே என மக்கள் அச்சமடைந்துள்ளன

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *