இலங்கையின் தலைவிதியை மாற்ற மக்களுக்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு!நாட்டில் ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டு மக்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை சரிசர நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு நாள் மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் தேர்தல் கடமைகளில் சுமார் 63,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்குரிய வாக்களிப்பு நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.இலங்கையின் தலைவிதியை மாற்ற மக்களுக்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு! | Tomorrow Sri Lanka S Destiny Will Be Determined

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *