யாழில் தீக்கிரையான வீடு: தீயில் எரிந்து வயோதிபப் பெண் பலியாழ்ப்பாணம் (Jaffna) நீர்வேலியில் வயோதிபப் பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணின் வீடே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் இதனால் வீட்டிலிருந்த குறித்த பெண்ணும் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இதில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளதோடு வீட்டின் வாசலிலே சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய் தூளும் வீசப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில், சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் தீக்கிரையான வீடு: தீயில் எரிந்து வயோதிபப் பெண் பலி | 65 Year Old Woman Burned In Jaffna Fire

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் லெனின் குமார் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்ட பின்ன உடற்கூற்று பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வீட்டுக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என்றும் அல்லது கேஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடு எரிந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery

GalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *