ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது.

புதிய ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | Main Request New President To The People Of Anura

நாட்டுக்காகக் கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைத்து பிரஜைகளையும் இலங்கையர் என்ற அடிப்படையில் பேதமற்ற வகையில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *