புத்தளம் கற்பிட்டி – கண்டக்குளி, வெல்லவாடி பகுதியில் 14 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நேற்று கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

கண்டக்குளி வெல்லவாடி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சத்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளானர்.

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த 54 வயது பெண் கைது | 54 Year Old Woman Arrested Abusing 14 Year Old Boy

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவர் மருத்துவ பரிசோதனைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *