சூடான் (Sudan) நாட்டின் RSF அமைப்பு மேற்கொண்ட படுகொலை தாக்குதலில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

சூடானின் தலைநகர் கார்தூமிற்கு தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் குறித்த அமைப்பு ஒரு கொடூரமான படுகொலையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த தாக்கில் குறைந்தது 124 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 150 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உள்நாட்டுப் போர் 

இது சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சூடானில் RSF அமைப்பு நடத்திய தாக்குதலில் 124 பேர் பலி | Sudan Rsf Attack 124 Died 150 Arrested

துணை இராணுவக் குழுவான RSF அமைப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சூடான் ஆயுதப் படைகளுடன் (SAF) கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இரு தரப்புகளும் குடிமக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவற்றில், சட்டவிரோத கொலைகள், இடம்பெயர்வு மற்றும் கட்டமைப்புகளை அழித்தல் ஆகியவை அடங்கும்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *