யுத்தத்தால் வடக்கு பகுதி மக்களிடம் இருந்து தென்னிலங்கை மக்கள் தூரமாகியுள்ளதாகவும், இதனூடாக அரசியல்வாதிகளே பாரியளவில் நன்மையடைந்துள்ளனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் அதிகளவில் நன்மையடைந்தவர்கள் இவர்களே... பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்! | Beneficiaries Of The War Were The Politicians Pm

யுத்தம் காரணமாகவே வடக்கு மக்களுக்கும், தென்னிலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் இல்லாமல் போனது.

யுத்தம் இடம்பெற்ற காலங்களில் தென்னிலங்கை மக்கள் வடக்கினை ஒரு யுத்த களமாகப் பார்த்ததுடன், வடக்கு தமிழ் மக்கள் தங்களது தென்னிலங்கை சிங்கள மக்களை தங்களது எதிரிகளாகப் பார்த்தனர்.

இதனால் அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்தனர்.

அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையும் யுத்தம் ஏற்பட ஏதுவாக இருந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாதவர்களால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தற்போது, மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளித்து சேவை செய்யக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை அமைக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் மக்களுக்கு எதனையும் செய்யாதவர்கள் தற்போது தேர்தல் காலத்தில் மக்களிடம் சென்று தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதாக கூறி வருகின்றனர்.

எனினும், தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோருக்கு மாத்திரமே அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *