கேகாலையில் உள்ள கெம்பிட்டிய வளவு உரிமையாளரை கொலை செய்த சம்பவம் குறித்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவி உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டிற்குள் புகுந்து வளவு உரிமையாளர் கொடூர கொலை! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் | Kempitiya Walawwa Owner Murder 3 Suspects Arrested

வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும், ஆனால் அப்போது வீட்டில் 10,000 ரூபா பணமும் அதன் உரிமையாளர் அணிந்திருந்த தங்க மோதிரமும் மாத்திரமே காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை கெம்பிட்டிய வளவு உரிமையாளர் கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

வீட்டிற்குள் புகுந்து வளவு உரிமையாளர் கொடூர கொலை! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் | Kempitiya Walawwa Owner Murder 3 Suspects Arrested

அங்கு அவரது மனைவி கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

தடிகம, வரகாபொல பகுதிகளில் இதேபோன்று 2 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இந்தக் கொலையை நடத்தியுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்சரா அபேசேகரவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேக நபர்கள் பிலியந்தலை துன்போவில பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

வீட்டிற்குள் புகுந்து வளவு உரிமையாளர் கொடூர கொலை! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் | Kempitiya Walawwa Owner Murder 3 Suspects Arrested

இதனையடுத்து, குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வளவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சம்பவத்தன்று அவரது சகோதரனின் காரில், வாடகைக்கு சாரதி ஒருவருடன் 3 திருடர்களை அழைத்துக்கொண்டு கேகாலையில் மரண வீடொன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டிற்குள் புகுந்து வளவு உரிமையாளர் கொடூர கொலை! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் | Kempitiya Walawwa Owner Murder 3 Suspects Arrested

பின்னர், சந்தேக நபர் கெம்பிட்டிய வளவு பகுதிக்கு சுமார் 500 மீற்றர் தொலைவில் காரை நிறுத்திவிட்டு குறித்த 3 திருடர்களையும் குறித்த வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வளவு வீட்டுக்குச் சென்ற 3 திருடர்கள், உரிமையாளரைக் கொலை செய்துவிட்டு வீடு முழுவதும் பணத்தை தேடி கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது அங்கு கிடைத்த 10,000 ரூபா பணத்தை தேடி எடுத்துவிட்டு, கொலை செய்யப்பட்ட நபரின் கையில் இருந்த தங்க மோதிரத்தை பறித்து சென்றனர்.

வீட்டிற்குள் புகுந்து வளவு உரிமையாளர் கொடூர கொலை! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் | Kempitiya Walawwa Owner Murder 3 Suspects Arrested

பின்னர் குறித்த தங்க மோதிரம் சந்தேகத்திற்குரிய பெண்ணினால் 160,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான 25 வயதுடைய நபருடன் 53 வயதுடைய பெண் நெருங்கிய உறவை வைத்திருந்ததுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய பெண் பிரபல நிறுவனம் ஒன்றின் உயர் பதவியில் இருக்கும் நபரொருவரின் மனைவி எனவும் தெரியவந்துள்ளது.

எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக, குறித்த பெண்ணின் தலைமையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்றையதினம் (05-11-2024) கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *