கொழும்பு பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியகம பிரதேசத்தில் இரத்தக் காயங்களுடன் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
75 முதல் 80 வயது மதிக்கத்தக்க, 5 அடி உயரமுடைய மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்