ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் முதல் பேரணி பரிதாபம்ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று(18) இடம்பெற்றது.
ஆனால் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது. சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் ‘அரிக்கேன் விளக்கு’ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இதன்போது வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் அவர் தனது பேரணிக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .