இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன (Kumar Dharmasena) முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
குறித்த புகைப்படத்தை அவர் இன்றையதினம் (19.08.2024) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில், இது ஒரு நினைவில் கொள்ள வேண்டிய இடம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த பதிவு தொடர்பில் முகநூல் பாவனையாளர்கள் தத்தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதேவேளை, யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களின் பின்னர் குமார் தர்மசேன முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ளமையானது, சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது