யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இன்று மாலை 6 மணியளவில் கல்வெட்டுக்கள் அடங்கிய நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த நினைவாலயம் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபன்
1982 கார்த்திகை 27 இலிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முல்லைத்தீவு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில் தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டு நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெற்றோர்கள் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழில் 1982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் மற்றும் சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயமொன்று திறக்கப்பவுள்ளது.
குறித்த நிரனவாலயமானது இன்று (23) மாலை ஆறு மணிக்கு நல்லூர் தியாக தீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக திறக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் மாவீர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் முல்லைத்தீவு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில் தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டுதாக நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெற்றோர்கள் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது