திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் நீரில் மூழ்கியுள்ள பகுதிகளுக்கு இன்று (25)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேரில் விஜயம் செய்து நீர் வடிந்தோடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர் மழையால் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பிரதேச சபை ,நகர சபை , பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நீரை வடிந்தோட செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை ; தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இம்ரான் மஹ்ரூப் | Flooded Trincomalee Mahroob Took Necessary Steps

ஆனால் பல இடங்களில் பெகோ இயந்திர தேவைப்பாடு உள்ளது.ஆகவே தனியாரிடம் இருந்து இதை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கையை அரசு அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க தேவையான நடவடிக்கையையும் எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இந்த நேரத்தில் களத்தில் நின்று பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.  

வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை ; தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட இம்ரான் மஹ்ரூப் | Flooded Trincomalee Mahroob Took Necessary Steps
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *