தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக மாவீரர்களின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், மத தலைவர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அந்தவகையில், தேராவில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் நேற்று (27) மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்த நிலையில் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு – தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரதான பொதுச்சுடர் ஒரு மாவீரரின் தந்தை சிறீதரன் அவர்களால் ஏற்றப்பட்டது. அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டது.
மாவீரர்களின் உறவுகள், பொதுமக்கள் , முன்னாள் போராளிகள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலினை மேற்கொண்டிருந்தனர்.