யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தராகிய ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார்.

மலேசியாவின் செல்வந்தர்கள் தரவரிசையில் ஆனந்த கிருஷ்ணன் மூன்றாம் நிலையை வகிப்பதாக போர்பஸ் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

மலேசிய தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் கூட்டாண்மையை நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு அளப்பரியது என பாராட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

மலேசியா பொருளாதார நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிய காலத்தில் கிருஷ்ணன் பொருளாதாரத்திற்கு வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என கூறப்பட்டுள்ளது.

தொலைதொடர்பு, ஊடகம், சக்தி வளம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிருஷ்ணன் தடம் பதித்து வெற்றியீட்டியுள்ளார்.

ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் மறைவு ! | A Wealthy Malaysian Native Of Jaffna Passed Away

ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து தசம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான அதான் சிரிப்பாணியோ தனது 18 ஆவது வயதில் தந்தையின் சொத்துக்களை கைவிட்டு பௌத்த துறவியாக துறவு பூண்டு தாய்லாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

வியாபார நடவடிக்கை

அவரது இரண்டு மகள்களும் வியாபார நடவடிக்கைகளில் அதிக நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தகிருஷ்ணன் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மலேசியாவின் பிரிக் பீட்ஸ் பகுதியில் பிறந்தார்.

ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் மறைவு ! | A Wealthy Malaysian Native Of Jaffna Passed Away

அவுஸ்திரேலியாவின் மெல்பன், பல்கலைக்கழகத்திலும் ஹவார்ட் வியாபார கல்லூரியிலும் ஆனந்த கிருஷ்ணன் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.

ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *