மாவீரர் நாள் செய்பவர்களை விசாரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை இருந்தும் இந்திய சொல்வதை செய்ய வேண்டிய தேவை எமது அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்?

யாழ்ப்பாணத்தில்(Jaffna) மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பில் நேற்று(6) இரண்டு இளைஞர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.

மாவீரர் வார காலப் பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும திட்டம் தொடர்பில் யாழ். அரசாங்க அதிபரின் அறிவிப்பு

இருவரிடம் விசாரணை

இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் நாள் குறித்து முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

யாழில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் மேலும் இருவரிடம் விசாரணை | Commemoration Of Heroes In Jaffna

மேலும், வல்வெட்டித்துறைப் பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினம் கொண்டாடியமை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 6 பேரிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *