யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சங்கரன் தோட்டம், கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்ற திருமணமாகாத பெண்ணே உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகாமையில் உள்ள காணி 

இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில் உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு | Burnt Dead Body Of Woman Recovered In Jaffna

இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *