இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வரையில் 12 விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களால் 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை மேலும் 77 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவங்கள் காரணமாக 404 சொத்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை சாரதிகள் தமது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த இயலாமையால் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்