வெளிநாடொன்றில் பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இச்சம்பவத்தில் 47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற இலங்கையருக்கே விக்டோரியா மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி அமண்டா ஃபொக்ஸ் இன்றையதினம் (19) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வெளிநாடொன்றில் பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி! | Sri Lankan Killed His Wife Australia 37 Years Jail

இந்த கொடூர கொலையின் விபரங்கள் விக்டோரியா மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்றையதினம் விவரிக்கப்பட்டன.

30 ஆண்டுகளுக்குப் பிறகே தினுஷ் குரேராவுக்கான மன்னிப்பு தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் பிள்ளைகளின் முன்னால் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி! | Sri Lankan Killed His Wife Australia 37 Years Jail

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி அன்று மெல்போர்ன் வீட்டில் தனது மனைவி நெலோமி பெரேராவை கோடரியால் மற்றும் கத்தியால் பலமுறை குத்தி சந்தேக நபரான தினுஷ் குரேரா கொலை செய்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *