13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக் கூட ஒருபோதும் இருக்கமுடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் யாழ்ப்பாண மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் மௌனித்தால் பெருமளவு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராகத் தானே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தங்களது பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆவது திருத்தத்தைப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.

13 ஆம் திருத்தத்தில் இந்தியாவின் மௌனம் மகிழ்ச்சி அளிக்கின்றது : கஜேந்திரகுமார் | Mp Gajendran Views On The 13Th Amendment Act

ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடன்படிக்கை பொருத்தமற்றது என்று இந்தியாவே உணருமானால் அது முற்றுமுழுதாக வேறு விடயம், நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவைக் கண்டறிய முடியும்.

ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப் பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும்பத்திரும்ப கூறியிருக்கும்போது 13ஆவது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் எவ்வாறு நடக்கமுடியும் ? அதனால் 13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக் கூட ஒருபோதும் இருக்கமுடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

you may like this…!

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *