மட்டக்களப்பு – கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தற்போது தடுத்து வைத்து விசாரனைக்குட்படுத்துவதாக மட்டக்களப்பு தலைமைய கால்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தக நிலைய கூடாரங்கள் நேற்று இரவு தீக்கரையாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தலைமையில் கடந்த 12 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த வர்த்தக நிலைய கூடாரங்களில் மரக்கறி உள்ளிட்ட பல உள்ளுர் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது | Arrested In Connection Arson Commercial Center

அதற்கமைய, குறித்த 12 பேரும் தங்களது வாழ்வாதரத்தை இந்த வர்த்தக நிலையங்கள் ஊடாக கிடைக்கும் வருமானத்திலேயெ முன்னெடுத்து வந்துள்ளனர்

இந்தநிலையில், கடந்த சில நாள்களாக குறித்த பகுதியில் குற்றச்செயல்களும் போதைப்பொருள் பாவனையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *