ஹமாஸ் (Hamas) படைகளின் ஆயுதப்பிரிவான அல்-கஸ்ஸாம் (al-Qassam) காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது.
குறித்த காணொளியானது நேற்றைய தினம் (04.01.2025) வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மூன்றரை நிமிட காணொளியானது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஹமாஸ் அமைப்பு
ஹமாஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட இந்த காணொளியில் 19 வயதேயான இராணுவ வீரர் லிரி அல்பாக் (Liri Albag) தம்மை மீட்குமாறு ஹீப்ரு மொழியில் இஸ்ரேல் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
காஸா எல்லையில் அமைந்துள்ள இஸ்ரேலின் நஹல் ஓஸ் (Nahal Oz) இராணுவத் தளத்தில் வைத்தே ஹமாஸ் படைகள் அப்போது 18 வயதான Liri Albag உட்பட 7 பெண் வீரர்களை சிறை பிடித்தனர். இதில் ஐவர் தற்போதும் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.
இஸ்ரேலுக்கு பாரிய ஆயுத கப்பலை அனுப்புகிறார் பைடன்
இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் அன்று நடந்த ‘அதிசயம்’
கொள்ளுங்கள்…! |